முகத்துக்கு பூசும் வாசனை பவுடரில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய மூலப் பொருட்கள் சேர்க்கப்படுவதாக பல காலமாக கூறப்பட்டு வந்தாலும், அதிகாரப் பூர்வமாக இந்த கூற்று இதுவரை நிரூபிக்கப்பட்டதில்லை.
ஆனால், ரகசிய உயிர்க் கொல்லி என்றழைக்கப்படும் கருப்பை புற்று நோய்க்கு வாசனை பவுடரும் ஓர் முக்கிய காரணம் என்பதை தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.
8 ஆயிரத்து 525 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் முகப் பவுடரை அதிகம் பயன்படுத்தும் பெண்கள் கருப்பை புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
குளியலுக்கு பின்னர் நறுமணத்திற்காக உடல் முழுவதும் பவுடர் பூசிக் கொள்வது..குறிப்பாக, பிறப்புறுப்பில் பவுடர் போட்டுக் கொள்வது போன்ற பழக்கத்தினால் கருப்பை புற்று நோய் தாக்கும் அபாயம் 24 சதவீதம் அதிகம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பிரிகாம் மற்றும் பாஸ்டன் ஆஸ்பத்திரிகளில் உள்ள டாக்டர்கள் 8 வகையிலான ஆய்வுகளை மேற்கொண்ட வகையில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட கையேட்டில் கூறப்பட்டுள்ளது
நன்றி..siruppiddy .net
கருப்பை புற்று நோய்க்கு முகப்பவுடரும் ஒரு காரணம்

Comments
Post a Comment