மாமியார் மாமனாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

மாமியார் மாமனாரிடம் குடும்பத் தலைவியின் பங்கு!

மாமியார் மாமனாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணிற்கு அவளின் தாய் கணவரிடமும், மாமியார் மற்றும் மாமனாரை அனுசரித்து நடக்க வேண்டும் என்று அன்புடன் போதிக்க வேண்டும். புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கும் போதே அந்தப் பெண் மாமியார், மாமனாரை இன்னொரு தாயாகவும் தகப்பனாகவும் பார்க்க வேண்டும். மாமியார் மாமனார் என்றாலே எப்பவும், குறை சொல்லிக் கொண்டே இருப்பார் என்று தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். பொறுமையாய் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்டு, அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.

குறை சொல்கிறார்களா?

 மாமியார், மாமனார் ஏதாவது அறிவுரை கூறினால், அவர்கள் குறை சொல்வதாக நினைக்காதீர்கள். தேவை ஏற்படும் போது மட்டுமே அவர்கள் அறிவுரை சொல்வார்கள் என்று நம்புங்கள்.

 எதற்கெடுத்தாலும் விவாதம் செய்யாமல், அவர்கள் ஏதாவது கருத்து சொன்னால், உடனடியாக மறுத்து பேசாமல், சிறிது நேரம் கழித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். நீங்கள் சொன்னா சரியாக தான் இருக்கும் என்று இறுதியாக சொல்லி விடுங்கள்.

 என்ன தான் அவசரமாக முடிவெடுத்து வெளியில் செல்ல நேர்ந்தாலும், உடனடியாக தொலைபேசியிலோ அல்லது நேரிலோ, அவரிடம், இன்ன இடத்திற்கு செல்கிறேன் என்று சொல்லி விட்டு செல்லுங்கள்.








பொருளாதாரத்தில் கணவனுக்கு நிகராக குடும்பத் தலைவியின் பங்கு !

 இன்றைய காலக்கட்டத்தில் குடும்பத்தை வழி நடத்த ஆண்கள் மட்டுமே வேலைக்குப் போய் சம்பாதிப்பதால், குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துகொள்ள முடியாது. அதனால் தங்கள் செலவுகளைக் குறைக்கிறார்கள், சேமிப்பு, முதலீடு ஆகியவைகளும் குறைவாகவே இருக்கும்.

ஆகையால் குடும்பத்தில் உள்ள பெண்ணும் வேலைக்குப் போனால், அந்தக் குடும்பத்தின் வருமானம் உயரும். குடும்பத்தில் பணம் அதிகம் புரளும்போது, தாராளமாக செலவு செய்து, குடும்பத்துக்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது அவசியமா?

 இன்று கணவன் மற்றும் மனைவி வேலைக்குச் செல்வது என்பது இன்றியமையாத ஒன்று. இன்றைய பொருளாதார நெருக்கடியில் உலகில் ஓரளவுக்குத் தாக்குபிடிக்க இருவரது சம்பளமும் முக்கியம்.

மேலும், இன்று பெண்களும் ஆண்களுக்கு நிகராக எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்களது படிப்பு மற்றும் திறமையை வீடு, குடும்பம் மற்றும் குழந்தைகளை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கச் சொல்வது சரியான செயலாக இருக்க முடியாது.

Comments