my blog list here
கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Wednesday 15 July 2020

மாதவிடாய் சீராக்கும் உணவுகள்




மாதவிடாய் சீராக்கும் உணவுகள்
பப்பாளிக் காய் :

👉 ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை ஒழுங்குபடுத்துவதற்கான சிறந்த உணவுதான் பப்பாளி. பப்பாளிக்காயில் உள்ள சத்துக்கள் கர்ப்பப்பையை சுற்றிலும் உள்ள தசைகளை பலப்படுத்தி, மாதவிலக்கை நெறிப்படுத்துகிறது. இது உங்களுக்கு மாதவிடாயை தூண்டுகிறது, எனவே, நீங்கள் மாதவிடாய் சீராக வராமல் கஷ்டபட்டு கொண்டு இருந்தால், நீங்கள் சாப்பிட வேண்டிய உணவு இதுதான்.

மஞ்சள் :

👉 மஞ்சள் தூள் மாதவிடாய் பிரச்சனைக்கு சிறந்த உணவுகள் மத்தியில் உள்ளது. இது இயற்கையில் வெப்பம், அதிக அளவு மருத்துவ குணம் கொண்டுள்ளது. மஞ்சள் பொடியை பாலில் கலத்து தினமும் இரவு படுக்கைக்கு முன் குடிக்கவும். 

கற்றாழை :

👉 உங்கள் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் மாதவிடாய் ஒழுங்கற்ற முறைகளை மாற்ற கற்றாழை உதவுகிறது. சிறந்த முடிவுகளைப் பெற, கற்றாழை ஜெல், தேன் ஒரு தேக்கரண்டி எடுத்து கலத்து தினசரி காலை உணவு முன் தினமும் சாப்பிடுங்கள். 

யோகா :

👉 உடலில் உள்ள ஹார்மோன் ஏற்றத்தாழ்வுக்கான பிரதான காரணங்கள் மன அழுத்தம் ஆகும். யோகா மற்றும் தியானம் மன அழுத்தை குறைக்க உதவுகிறது. தியானத்தின் மூலம் உடலில் ஹார்மோனை சமநிலை செய்ய முடியும். மருந்துகள் இல்லாமல் ஒழுங்கற்ற மாதவிடாய் கட்டுப்படுத்துவதற்கான மிக சிறந்த வழிமுறைகள் இவை. 

சீரகம் :

👉 சீரகத்தில் பல நன்மைகள் நிரம்பியுள்ளன. சீரகத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் இந்த நீரை குடிக்க வேண்டும். இதனால் உங்களின் மாதவிடாய் பிரச்சனை தீரும். 

இலவங்கப்பட்டை :

👉 இலவங்கப்பட்டை உங்கள் உணவின் சுவையை அதிகரிக்க உதவுகிறது, ஆனால் உங்கள் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதில் பெரிதும் உதவுகிறது. வெதுவெதுப்பான பாலில் இலவங்கப்பட்டை தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து குடிக்கவும். மாதவிடாய் பிரச்சனைக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

வெல்லம் :

👉 வெல்லத்தில் இரும்புச்சத்து நிரம்பியுள்ளது. இரத்த சோகை காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. தினமும் உணவிற்கும் பிறகு வெல்லம் ஒரு துண்டு சாப்பிடுவது மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும்.

👉 மேலே சொல்லப்பட்ட பொருட்களை தினமும் அளவோடு சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சுழற்சி சரியாக நடக்கும்.





No comments:

Post a Comment