கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Tuesday, 13 September 2016

கருப்பை நீர்கட்டி ஏற்படக் காரணங்கள்
கருப்பை நீர்கட்டி ஏற்படக் காரணங்கள் :

♡ கருப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படுவது கருப்பை நீர்க்கட்டிகள் ஆகும். மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றன. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச்செய்கிறது.

♡ அடிக்கடி அபார்ஷன்இ அதிக டெலிவரிஇ மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்குஇ சர்க்கரை நோய்இ இரத்தக் கொதிப்புஇ உடல் பருமன்இ தைராய்டு போன்ற உடல்நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு கருப்பை பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

♡ ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது. டெஸ்டோஸ்டிரான் அதிகரிப்பதுஇ புரோலாக்டின் அதிகரிப்பது ஆகியவற்றால் கருப்பை நீர்கட்டி வர காரணமாகின்றன.


இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
கருப்பை நீர்க்கட்டி வராமல் தடுக்கும் முறைகள்


கருப்பை நீர்க்கட்டி வராமல் தடுக்கும் முறைகள் :

♡ அதிக அளவு எடை உள்ளவராக இருந்தால் உடலின் எடையைக் குறைக்க வேண்டும். நாள் தவறாத உடற்பயிற்சியும்இ உணவுக்கட்டுப்பாடும் அவசியம்.

♡ தினமும் காலை அல்லது மாலை வேளையில் 2 முதல் 3 கி.மீ தொலைவு வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

♡ அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள்இ சாக்லேட்இ ஐஸ்கிரீம்இ ஆட்டிறைச்சிஇ எண்ணெயில் பொரித்த பலகாரங்கள்இ இனிப்பு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

♡ இயற்கை உணவுகளான காய்கறிஇ கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ள வேண்டும்.

உணவு முறைகள்


உணவு முறைகள் :

♡ இரும்புச் சத்து உணவுகள் அவசியம். உப்பை கண்டிப்பாக குறைக்கவும். குளிர்பானங்கள்இ பதப்படுத்தப்பட்ட உணவுகள்இ இனிப்பு வகைகள்இ ஐஸ்கிரீம்இ மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள்இ கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும்.

♡ அரிசி உணவுகளையும் குறைக்க வேண்டும். உணவில் ஒரு கப் சாதத்துடன் இரண்டு கப் காய்கறி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

♡ முளைக்கீரை மற்றும் வெந்தயக்கீரை ஆகியவற்றை வாரம் இரண்டு முறையாவது சேர்க்க வேண்டும்.

கருப்பை நீர்க்கட்டிக்கு எளிய மருத்துவம்


கருப்பை நீர்க்கட்டிக்கு எளிய மருத்துவம் :

♡ சூடான தண்ணீரை தோல் பை அல்லது ரப்பர் பையில் நிரப்பிஇ வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.

♡ மலச்சிக்கல் இருந்தால்இ சீரகம் போட்டுக் காய்ச்சிய வெதுவெதுப்பான நீரைப் பருகவும். சீரான இடைவெளியில் வெந்நீரை அருந்தவும். எளிதில் செரிக்கும் புழுங்கலரிசிக் கஞ்சியைக் காலையில் 2 டம்ளர் அளவு குடிக்கவும்.

♡ உருளைக் கிழங்குஇ வாழைக்காய் போன்ற வாயுப் பண்டங்களை எண்ணெய்யில் வறுத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

♡ பருவ காலங்களுக்குத் தக்கபடி கிடைக்கும் பழங்களை அன்றாடம் சாப்பிடவும். உடல்சோர்வு தரும் செயல்களை மாதவிடாய் நாட்களில் செய்வதைத் தவிர்க்கவும்.

♡ மதிய உணவும்இ இரவு உணவும் எளிதில் செரிக்கும் வகையில் அமைத்துக் கொள்ளவும். அதாவது மிளகு ரசம்இ கறிவேப்பிலைத் துவையல்இ கடைந்து வெண்ணெய் நீக்கிய மோர்இ நார்த்தங்காய் வற்றல் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.


No comments:

Post a Comment