கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Thursday, 6 February 2020

வெட்கம் இல்லையென்றால் ..! எதுவேடுமானாலும் செய்து கொள்!ஒவ்வொரு ஆணும் சரி , ஒவ்வொரு பெண்ணும் சரி, அவர்களுக்கு வாழ்க்கை துணையாக வரக்கூடியவர்கள் 'ஒரு நல்ல ஒழுக்கமுள்ள , அடக்கமான , அழகான பெண்ணாக இருக்கவேண்டும் . பெண்கள் அவர்களுக்கு வாழ்க்கை துணையாக ஒரு நல்ல படித்த அழகான ஒழுக்கமுள்ள வீரமான ஆணாக இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.
மாறாக கெட்டுபோனவர்களாக , ஒழுக்கம் இல்லாதவர்களாக , பொறுக்கியாக, பெண்ணாசை பிடித்தவர்களாக அப்படி யாரும் விரும்பமாட்டார்கள் .  இதில் எல்லோருக்கும் ஒருமித்த கருத்து தான்!


 ஒரு ஆண் ஒரு  அந்நிய பெண் மீது ஆசை கொண்டு , அவளை அடையவேண்டுமென விரும்புகிறான். ஒரு தடவை அந்த ஆண்  அந்த பெண்ணை பார்த்து கேட்கிறான் '' நான் உன்னுடன் உறவுகொள்ள ஆசைப்படுகிறேன் '', நாம் இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்று சொல்லி முடிக்கிறான். அதற்கு அந்த பெண் ,   நான் உன்னிடம் ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன் அதற்கு நீ சரியாக பதில் சொல்வதை பொறுத்து இருக்கிறது , நாம் இருவரும் உல்லாசமாக இருப்பது என்று சொல்லி முடித்தாள் . அந்த பெண் ஒரு கேள்வியைக் கேட்டாள், '' உன் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் , அந்த பெண்களில் ஒருத்தியை , என் வீட்டில் இருக்கும் என் அண்ணண் நீ கேட்டது போல உன் சகோதரியிடம் கேட்டாள் , அவள் என்ன பதில் சொல்லியிருப்பாள்..? அவளே உன்னிடம் வந்து , ''ஒருவன் இப்படி கேட்கிறான் என்று சொன்னாள் என்றால் , உன் மனசு எப்படி துடிக்கும்? , உன் உணர்வு எப்படி இருந்திருக்கும் ..?  ''இப்படி ஒரு பொருக்கி  என் சகோதரியிடம் கேட்டுவிட்டான் என்று உன் மனசு வலியில் துடிக்கும். அந்த பெண் இந்த கேள்வியை கேட்ட பிறகு , அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் , வெட்கி தலைகுனிந்தான் !  அப்பொழுதுதான் அவனுக்கு புரிந்தது . அவன் உணர்ந்தான் .  மற்ற அந்நிய பெண்களை பார்க்கும்போது , தவறாக உள்ளத்தில் கெட்ட எண்ணங்கள் வரும்போது , நம் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் , அவர்களை மற்ற ஆண்கள் , இப்படித்தானே  பார்ப்பார்கள், நினைப்பார்கள் என்று உள்மனதில் அவனுக்கு ஊசியால் குத்தியது போன்று ஒரு உணர்வு! பிறகு அவன் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோரி , இருவரும் அங்கேயிருந்து புறப்பட்டு விடுகிறார்கள்.

ஒவ்வொரு ஆணும் இப்படி நினைக்கவேண்டும், '' நம் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்று நாம் விரும்புவோம் , மற்ற ஆண்கள் நம் வீட்டு பெண்களை பார்த்துவிடக்கூடாது , வேற எந்த அந்நிய ஆண்களும் நம் வீட்டு பெண்களிடம் பழக கூடாது என்று நாம் நினைக்கும்போது மற்ற ஆண்களும் நம்மைப் போல்தான் நினைப்பார்கள் அவர்கள் வீட்டு பெண்களை என்று நாம் ஒவ்வொருவரும் உள்மனதில் உணர வேண்டும்! மற்ற பெண்களை நம் வீட்டு பெண்களாக பார்க்க வேண்டும்!

ஒரு மகள் கேட்டாள் , தன்னுடைய தந்தையிடம் '' அப்பா ! ஏன் ஈக்கள் எல்லாம் இனிப்பை சுற்றி வருகிறது , அந்த இனிப்பை சுற்றி மொய்த்துக்கொழிகிறது..? அதற்கு அந்த தந்தை , மகளே! ஈக்களுக்கு இனிப்பு என்றால் பிடிக்கும் , அந்த இனிப்பை சுவைக்கவேண்டும் என்று அந்த ஈக்கள் விரும்பும். அந்த இனிப்பை முடிவைத்தால் என்றால் , எந்த ஒரு ஈயும் அந்த இனிப்பின் பக்கத்தில் கூட நெருங்கமுடியாது! அந்த இனிப்பைவிட  ஒரு மேலான ஒரு இனிப்பு இருக்கிறது அதுதான் பெண்!  ''ஒரு பெண் முறையாக ஒழுக்கமாக தன்னை மூடிக்கொண்டாள் என்றால் , மறைக்கக்கூடிய இடங்களை முழுமையாக மறைத்து கொண்டால் என்றால் , எந்த ஒரு ஆணும் , அவளை பார்க்கவும் மாட்டான், நெருங்கவும் மாட்டான். ஆண்களை ஈர்க்கும் விதமாக பெண்கள் ஆடைகள் அணிந்தால் , நிச்சயமாக ஒழுக்கமுள்ள ஆண்களும் வழிகெட்டு , தவறிவிடுவார்கள் . அதற்கு  காரணம் , பெண்கள்தான் ! அவர்கள் அணியும் ஆடைதான் என்று அவர்கள் உணரவேண்டும்!

காதலிப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் அல்ல,  காதல் என்ற பெயரில் காமம் கொள்ளும் நிறைய ஆண்கள் காதலர்கள் போர்வையில் இருக்கிறார்கள் என்று சொல்லவரும்! ஒரு ஆணும், பெண்ணும் தனிமையில் இருந்தால் என்றால் , அவர்கள் எல்லையை மீறுவார்கள் . தவறு நடக்கும். சூழ்நிலையை அவர்கள் இப்படி உருவாக்கிக்கொள்கிறார்கள் . பெண் என்பவள் அவள் மென்மையானவள் , அவளுக்கு புத்தி பின்னாடிதான் வேலை செய்யும்! அவள் பிறகுதான் சிந்திக்க செய்வாள். பெண்களே  !  உங்கள் கற்பு விலைமதிக்க முடியாது ! அந்த கற்பு வைரத்தைவிட ரொம்ப பாதுகாப்பாக இருக்கவேண்டும் ! நீங்கள் எப்பொழுதும் ஆண்களிடம் ரொம்ப தள்ளி இருக்கவேண்டும்! யார் எந்த ரூபத்தில் எந்த நேரத்தில் எப்படி இருப்பார்கள் , வருவார்கள் என்று தெரியாது!

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாகள் இருந்தாலும் சரி உங்களுக்கு வெட்கம் இல்லையென்றால் நீங்கள் எதுவும் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்....!!!!!
ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வெட்கம் ரொம்ப அவசியம். கூச்ச நாணம் இருக்கவேண்டும்! என்று இந்த பதிவை முடிக்கிறேன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த பதிவில் சந்திப்போம்...
உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!
இந்த பதிவில் ஏதாவது பிழைகள் இருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டவும்! இன்ஷாஅல்லாஹ் அடுத்தமுறை திருத்திக் கொள்வேன்.
சத்திய பாதை இஸ்லாம் 

No comments:

Post a Comment