பிரசவ காலம் நெருங்கிவிட்டது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் பல இருந்தாலும், பிரசவ காலம் நெருங்கும் போது இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்படி பிரச்சனைகள் அதிகரிப்பதால், பல கர்ப்பிணிகள் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். அதிலும் பிரசவ காலம் நெருங்க நெருங்க மன அழுத்தத்துடன் ஒருவித குழப்பம் மற்றும் பயம் மனதில் எழும். ஏனென்றால் எப்போது பிரசவம் நடைபெறும் என்று தான். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, முதன் முறையாக கருத்தரித்திருப்பவர்களுக்காக பிரசவம் நெருங்கும் போது கர்ப்பிணிகள் எந்த மாதிரியான பிரச்சனைகளையெல்லாம் சந்திக்கக்கூடும் என்பதைக் குறிப்பிட்டுள்ளது. அதைப் படித்து அந்த அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால், பிரசவ காலம் நெருங்கிவிட்டது என்பதை குழப்பமின்றி தெளிவாக முடிவு செய்து கொள்ளலாம். ADVERTISEMENT சரி, இப்போது பிரசவ காலம் நெருங்கும் போது ஏற்படும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!!!
வெள்ளைப்படுதல்
பிரசவ காலம் நெருங்கும் போது, கர்ப்பிணிகளுக்கு வெள்ளைப்படுதல் அதிகரிக்கும். இப்படி வெள்ளைப்படுதல் அதிகரித்தால், கருப்பை வாயானது மென்மையாகி குழந்தை வெளிவர தயாராக உள்ளது என்று அர்த்தம்.
முதுகு வலி
சில கர்ப்பிணிகளுக்கு பிரசவ காலம் நெருங்கும் நிலையில் கடுமையான முதுகு வலியை சந்திக்கக்கூடும். இப்படி முதுகு வலி ஆரம்பித்தால், மருத்துவரை அணுகுங்கள்.
வயிற்று பிடிப்புகள்
எப்படி மாதவிடாயின் போது கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறதோ, அதேப் போன்று பிரசவ காலம் நெருங்கும் போது உணரக்கூடும். அப்படி உணர்ந்தால், வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள். இது சற்று நிவாரணம் அளிக்கும்.
நீர் வெளியேறுதல்
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது, கருப்பையில் குழந்தையை பாதுகாக்கும் வகையில் ஆம்னியாட்டிக் திரவமானது இருக்கும். இந்த திரவம் தான் குழந்தையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். ஆனால் பிரசவ காலம் நெருங்க ஆரம்பித்தால், அந்த ஆம்னியாட்டிக் திரவமானது வெளியேற ஆரம்பிக்கும். இதைக் கொண்டும் பிரசவ காலம் நெருங்கிவிட்டது என்று அறிந்து கொள்ளலாம்.
வயிற்று உப்புசம்
கர்ப்பத்தின் கடைசி மாதத்தில் திடீரென்று வயிற்று உப்புசம் ஏற்பட்டால், பிரசவ காலம் நெருங்குகிறது என்று அர்த்தம்.
வாந்தி
சில கர்ப்பிணிகளுக்கு பிரசவ காலம் நெருங்கினால், வாந்தி வர ஆரம்பிக்கும். அதிலும் எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்டாலும் வாந்தி வந்தால், அதுவும் பிரசவத்திற்கான அறிகுறிகளுள் ஒன்றே.
வயிற்று வலி
பொதுவாக பிரசவம் நடைபெறப் போகிறதென்றால், கடுமையான வயிற்று வலி ஏற்படும். இது அனைவருக்கும் தெரிந்த ஒரு பொதுவான அறிகுறியே.
பருமன் குறையும்
சாதாரணமாக கர்ப்ப காலத்தில் வயிற்று பருமனானது அதிகம் இருக்கும். ஆனால் பிரசவ காலம் நெருங்கினால், வயிற்று பருமனானது குறைந்து, முன்பை விட நிம்மதியாக மூச்சு விட முடியும். இப்படி திடீரென்று வயிற்று பருமன் குறைந்து, நிம்மதியான மூச்சு விட நேர்ந்தால், அதுவும் பிரசவ காலம் நெருங்கிவிட்டது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
நடுக்கம்
குளிராமல், உடல் நடுக்கம் ஏற்பட்டாலும், அது பிரசவ காலம் நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.
உணவின் மீது ஆசை அதிகரித்தல்
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது ஒருசில உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும். அப்படி கர்ப்பத்தின் கடைசி காலத்திலும் அளவுக்கு அதிகமாக இருந்தால், அதுவும் இதற்கான அறிகுறிகளுள் ஒன்றே.
Comments
Post a Comment