பொடுகை மாயமாக மறைய வைக்கும் சில அற்புத வழிகள்!

என் அழகு என் கணவருக்கு மட்டும்!
பெண் என்பவள் மூடி  மறைக்கப்படவேண்டிய
ஒரு அழகான வைரக்கல் !
விலை மதிப்பு இல்லாத 


முட்டை மாஸ்க்
முதலில் தலைமுடியை நீரில் அலசி, பின் 2 முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து, ஈரத் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஷவர் கேப் அல்லது துணியால் தலையைச் சுற்றி, 30 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
வினிகர்
6 டேபிள் ஸ்பூன் நீரில், 2 டீஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து, தலையில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதன் மூலமும் பொடுகைப் போக்கலாம்.

வெந்தய பேஸ்ட்
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும் படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச முடி உதிர்வது குறைந்து, பொடுகும் நீங்கும்.
தயிர்
புளித்த தயிரைக் கொண்டும் பொடுகைப் போக்கலாம். அதற்கு தயிரை தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலசினால், பொடுகு நீங்குவதோடு, முடியின் மென்மையும் அதிகரிக்கும்.
ஆலிவ் ஆயில் மற்றும் இஞ்சி
ஆலிவ் ஆயிலில் இஞ்சி சாற்றினை சேர்த்து கலந்து, அக்கலவையை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் அலச, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
எலுமிச்சை சாறு
சந்தன எண்ணெயில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு அலச, பொடுகு நீங்கும்.
சல்பர் பவுடர், பாதாம் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர்
வாரம் ஒருமுறை சல்பர் பவுடர், பாதாம் எண்ணெய் மற்றும் சிறிது ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து, ஸ்கால்ப்பில் தேய்த்து ஊற வைத்து அலச, பொடுகு மறையும்.
கற்றாழை
இரவில் படுக்கும் முன் கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் அலசினால், பொடுகு நீங்கும்.

Comments