![]() |
பெண்கள் அழகாக இருக்க வேண்டும் மற்றவர்கள் பார்ப்பதற்காக அல்ல கணவன்மார்கள் மட்டும் பார்க்கும் அழகு ! |
ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் அளவு சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைத்து வர வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் அதை வெள்ளைத் துணியில், வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு தொல்லையும் நீங்கும்.
சில பெண்கள், அடுத்த மாதம் எனக்குத் திருமணம், நான் கறுப்பாக இருக்கிறேன், ஏதாவது செய்து என்னை வெள்ளையாக்குங்கள் என்று கூறுவார்கள். இப்படிப்பட்டவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பிறக்கும்போதே கறுப்பானவர்கள் ஒரு சில முறைகளால் லேசாக சிவப்பாக ஆகலாம். ஆனால் அதுவும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டுமானால் பல சிகிச்சைகள் உள்ளன. திடீரென சிவப்பாக்க எந்த முறையும் இல்லை. எனவே, உடனடியாக சிவப்பாக்க வேண்டும் என்று எந்த அழகுக் கலை நிபுணரையும் நிர்ப்பந்திக்க வேண்டாம்.
Comments
Post a Comment