ஓட்ஸ் பொங்கல் பொங்கலுக்கு எல்லோரும் வழக்கமா சர்க்கரை பொங்கல்தான் வைப்போம்.. அதோடு இந்த ஓட்ஸ் பொங்கலையும் வச்சு பாருங்க.. முற்றிலும் மாறுபட்ட சுவையுடன் சூப்பரா இருக்கும்... அப்பறம் என்ன? ஒரே பாராட்டு மழைதான்......!
தேவையானப் பொருள்கள்:
ஓட்ஸ் - 2 கப்
பச்சைப் பருப்பு - 3/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
நெய் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் 1 - டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை:
* முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பை வாசம் வர வறுத்துக் கொள்ளவும்.
* பிறகு குக்கரில் (அ) ஒரு பாத்திரத்தில் பருப்பு வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
* பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அதில் ஒரு பங்கு ஓட்ஸூக்கு இரண்டரை பங்கு தண்ணீ¬ர் என 5 கப் தண்¬ர் ஊற்றி கொதி நிலை வரும் வரை மூடி வைக்கவும்.
* கொதி வந்ததும் ஓட்ஸைப் போட்டு, தேவையான உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.
* இரண்டும் நன்றாகக் குழைந்து, வேகும் வரை மிதமானத் தீயில் வைத்திருக்கவும்.
* ஒரு வாணலியில் நெய் விட்டு சூடுபடுத்தவும்.
* அதில் மிளகு(ஒன்றிரண்டாகப் பொடித்து), சீரகம், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும்.
* அல்லது தாளித்த பிறகு பொங்கலை வாணலியில் சேர்த்து கிளறி இறக்கவும். இந்த முறையில் செய்யும்பொழுது மிகவும் நன்றாக இருக்கும்.
* இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் இவை மிகப் பொருத்தமாக இருக்கும்.
குறிப்பு: சாதாரண பொங்கல் போல் அல்லாமல் ஓட்ஸ் பொங்கல் செய்யும்போது பச்சைப் பருப்பின் அளவைக் கொஞ்சம் கூட்டி செய்தால்தான் நன்றாக இருக்கும்.
அவல் பொங்கல்
இந்த பொங்கலுக்கு ஸ்பெஷலா என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா.... அவல் பொங்கல் செஞ்சு பாருங்க... வித்தியாசமான சுவையுடன் பிரமாதமாக இருக்கும்........
தேவையான பொருட்கள்:
அவல் - 1/2 கிலோ
வெல்லம் - 1/2 கிலோ
பாசிப்பருப்பு - 150 கிராம்
ஏலக்காய் - 6
கிஸ்மிஸ் பழம் - 20
தேங்காய் பால் - 1 டம்ளர்(200 மி.லி)
காய்ச்சிய பால் - 1 டம்ளர்(200 மி.லி)
தேங்காய் சில்(பொடியாக நறுக்கியது - 1 கப்
நெய் - 100 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
* வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கலந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
* பாசிப்பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ளவும்.
* அவலை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
* வெட்டி வைத்திருக்கும் தேங்காய் சில்-லில் பாதியை நெய்யில் வறுத்து ஆற வைக்கவும்.
* வெந்த பாசிப்பருப்புடன், ஊறவைத்து அவலை சேர்க்கவும். அதனுடன் வெல்லப்பாகு கலந்து, பால், தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
* அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். மறக்காமல் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். உப்பு அதிகமாக சேர்த்து விடக் கூடாது.
* நன்கு குழைந்து பொங்கல் பதத்துக்கு வந்தவுடன், இறக்கி நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம், வறுத்த தேங்காய், மீதமுள்ள தேங்காய் சில், நெய் ஊற்றி கிளறி விடவும்.
* நெய் மணத்துடன் கமகமக்கும் சுவையான அவல் பொங்கல் தயார்.

Comments
Post a Comment