- Get link
- X
- Other Apps
இள நிறங்களை உபயோகியுங்கள் சிறிய வீடுகளுக்கு இடத்தை பெரிதாகக் காட்டும் வழிகளில் மிகவும் சுலபமான வழி இது. க்ரீம், வெளிறிய பாக்கு நிறம் அல்லது வெளிறிய மஞ்சள் நிறம், மங்கலான கிரே நிறம் ஆகியவை நல்ல வெளிச்சத்தை தந்து இடத்தைப் பெரிதாகக் காட்டும். எனினும், ஒவ்வொரு அறைக்கும் வெவ்வேறு நிறங்களைப் பூசுவதன் மூலம் அவற்றை எளிதில் வேறுபடுத்திக் காட்டி அதிக இடத்தை உணர வைக்கும்.
பெரிதாக அச்சிடப்பட்ட பொருட்களைத் தவிருங்கள் பெரியதாக அல்லது அதிக வேலைப்பாடுடைய கார்பெட்டுகள், திரைச்சீலைகள் மற்றும் அறைகலன்கள் மிகுந்த நெருக்கடியான தோற்றத்தை ஏற்படுத்தும். உற்சாகத்தைத் தரும் வசனங்களைக் கொண்ட சுவர் அலங்காரங்களை ஒன்றோ அல்லது இரண்டோ உபயோகிக்கலாம். ஆனால் அதில் அதிக அளவு நெருக்கடியான அச்சுகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
மறைவு இடங்களை உருவாக்குங்கள் சிறிய வீடுகளுக்குத் தேவையான புத்திசாலித்தனமான யோசனைகளில் முயன்று பார்க்க வேண்டியதில் இதுவும் ஒன்று. கட்டில், கண்ணாடிகள் அல்லது நாற்காலிகளுக்கு அடியில் உள்ள இடங்களை பொருட்கள் வைக்கும் வசதியுடன் செய்து கொள்வது நிறைய இடத்தை மிச்சப்படுத்தும். இந்த இடத்தை காபி மேஜையாகவோ அல்லது உட்காருவதற்கோ பயன்படுத்தலாம்.
அலமாரியை அறைத் தடுப்புகளாகப் பயன்படுத்தலாம் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பயன்படும் ஒரு மிகச்சிறந்த உக்தியாக இது இருக்கும். வீட்டில் உள்ள இடங்களை பெரிய அலமாரிகள் வைத்துப் பிரித்து அதில் புத்தகங்கள், அழகுப் பொருட்கள் அல்லது துணிகளை வைக்கப் பயன்படுத்தலாம்.
சுவர்களை பயன்படுத்துங்கள் உங்கள் வீட்டின் தரைப்பகுதி அடைசல்களிலிருந்து விடுபட, சுவற்றைப் பயன்படுத்துங்கள். சுவற்றில் உள்ள அலமாரிகளை புத்தகம், கிண்ணங்கள், புகைப்படங்கள், சிடிக்கள் மற்றும் பிற பொருட்களை வைக்கப் பயன்படுத்துங்கள். ஏன் உங்கள் டிவி-யை கூட சுவற்றில் பொருத்துவதன் மூலம் நிறைய இடத்தை சேமிக்கலாம்.
கூடுதல் அடுக்குகள் வீட்டை அழகுப்படுத்தும் விதமாகவும், தற்பொழுது பெட்டிகள், கூடைகள் ஆகியவை பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இவற்றை மேஜையின் கீழோ, அலமாரிகளின் மேலோ அல்லது பெஞ்சுகளின் கீழோ வைக்கலாம். பார்பதற்கு ரசிக்கும்படியாக இருக்கும் நிறைய பொருட்களையும் வைக்கலாம். உங்களுக்கு என்ன தேவையோ அல்லது உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை மட்டும் வையுங்கள்.
மெலிதான அறைகலன்கள் நீங்கள் வீட்டில் இடத்தை சேமிக்க விரும்பினால், அந்த பெரிய சதுரமான மேஜை நாற்காலிகளைப் பற்றிய ஆசையை குறித்து மறு பரிசீலனை செய்யுங்கள். நீளமாகவும், சற்றே மெலிதாகவும் உள்ள அறைகலன்களை அல்லது உயரம் குறைவான நீண்ட பெஞ்சுகளையோ பயன்படுத்துங்கள். எவ்வளவு வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு வீடு அடைந்து காணப்படும்.
கண்ணாடியை உபயோகியுங்கள் ஒளி ஊடுருவுவதால் கண்ணாடி இடத்தை அடைக்காத தோற்றத்தை அளிக்கும். மேஜை மீது மரத்திற்கு பதிலாக கண்ணாடியை உபயோகிக்கலாம். அதேபோல் வீட்டின் உட்புறங்களில் உள்ள தடுப்புகள், குளியலறை ஆகிய இடங்களிலும் கண்ணாடியைப் பயன்படுத்தலாம். பெரிய கண்ணாடி ஜன்னல்கள் அல்லது பிரெஞ்சு ஜன்னல்கள் பெருமளவு வெளிச்சத்தை வீட்டிற்குள் கொண்டு வருவதால், வீடு அதிக இடம் கொண்டதாக காட்சி அளிக்கும்.
சின்ன வீட்டையும் பெருசா கட்டா சில புத்திசாலித்தனமான டிப்ஸ்
Comments
Post a Comment