மகளிரைப் பயமுறுத்தும் மார்பகக் கட்டிகள்

மகளிரைப் பயமுறுத்தும் மார்பகக் கட்டிகள்.....................

பொதுவாகவே பெண்களைப் பயமுறுத்தும் நோய்களில் , மார்பகம் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தையுள்ள பெண்களுக்கு பால் கட்டிக் கொண்டு வலி ஏற்படும். மாதவிலக்கு சரி வர வெளியேறாத பெண்களுக்கு மார்பகங்களில் கட்டிகள் தோன்ற வாய்ப்புண்டு.


இரண்டு பக்க மார்பகத்திலும் மாத விலக்கு  முன் தொட்டால் வலி ஏற்படும் . மார்பகத்தில் சிறுசிறு உருண்டையாகக் கட்டிகள் இருக்கும். சிலருக்கு அதிகமான போருக்க முடியாத வலி இருக்கும். பூப்பெய்தும் பருவத்திலும், கடைசி மாத விடாய்க்கு முன்பும் தோன்றுகிறது என்றாலும் பெரும்பாலும் 40-45 வயதில் தான் அதிகம் பாதிக்கிறது. அப்போது இரண்டு மார்பகத்திலும் சிறுசிறு உன்ருண்டையான கட்டிகள் தென்படும். விரல்களினால் மார்பகங்களை அழுத்தி பார்க்கும் போதுதான் சிறுசிறு உருண்டையான கட்டிகள் தெரியும். காம்புகள் உள்ளே இழுக்காமல் இருக்கும். ஆனால் காம்பின் வழியாக கரும்பச்சை நிறமாக அல்லது நிறமற்ற நீர்மம் சில சமயம் வெளிவரும். சில சமயத்தில் மார்பகத்தின் ஒரு பகுதியில் மட்டும் கட்டி காணப்படும்.

இக்கட்டியுடன் அக்குள்களில் நிணநீர்க் கட்டிகள் வீங்கி இருக்கும். ஆனால் அவை மிகச் சிறிய அளவில் வலியுடன்  காணப்படும். இக்கட்டி புற்றுக்கட்டி [கேன்சர்] என பயப்பட வேண்டாம். இம்மாற்றம் பூப்புப் பருவத்திலும், கடைசி மாதவிடாய் முன்பும் வருவதுண்டு.

மார்பகத்தில் ஒரே ஒரு பைமுண்டு நீர்ப்பை மட்டும் பெரிதாக வரும். இது பொதுவாக மார்பகத்தின் மேலே வெளிப்புறம் தெரியும். இம்முண்டு நீல நிறமாக இருக்கும். இதற்கு நீல நிறப்பை முண்டு என்று பெயர். சிறுசிறு முண்டுகளும் சிலருக்கு காணப்படும்.

பால் பட்டிகளாலும் தனி முண்டுகள் தெரியும். இது நாள  பாப்பிலோமாவாக மாறுவது உண்டு. இதுவும் தீங்கற்று கட்டிதான். என்றாலும் தீங்கான ஆபத்தை உருவாக்கும் கட்டிகளும் ஏற்பட வாய்ப்புகள்  உள்ளது. அதற்கு பிறகு இந்தக் கட்டிகள் ஆஅபத்தை ஏற்படுத்திய பின்,  அதை அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றி விடும் சூழ்நிலையு உள்ளது.

பைரோ அடினோமா என்கிற நார்த் திசுக் கழலைக் கட்டி 14 வயது முதல் 20 வயது வரை தோன்றும். சுமார் 24 வயதில்தான் பெரும்பாலான கட்டிகள் தோன்றுகின்றன. மிக அரிதாகவே பல கட்டிகள் ஒரே சமயம் தோன்றலாம். இது சோதித்துப் பார்க்கும்போது இக்கட்டியின் மேற்புறம் வழவழப்பாக வும் , கடினமாகவும் மார்பகத்தில் தடை இல்லாமல் அங்கும் இங்கும் அசையவும் செய்யும். இந்தக் கட்டியை மார்பக வலி என்றும் கூறுவார்கள். இக்கட்டிகளே பெண்களுக்கு இளம் வயதில் அதிகமாக ஏற்படும் பயமுறுத்தும் கட்டிகலாகும்.

பொதுவாக மார்பகக் கட்டிகள் என்றாலே கேன்சர் கட்டிதான் என்று பயப்படும் காலமாக உள்ளது. அதே சமயம் கட்டிகளினால் ஆபத்து இல்லை என்று அஜாக்கிரதையாகவும் இருக்கக் கூடாது. அது கேன்சராகவும் மாறினாலும் அடிக்கடி தொந்தரவு தரக்கூடிய போருக்க முடியாத வலியாக  இருப்பதாலும், மார்பகத்தையே அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுவதும் தற்சமயம் மிகச் சர்வ சாதாரணமாக உள்ளது.

பொதுவாக மார்பகத்தில் வலி கட்டிகள் என்றாலே பய உணர்வு தான் அதிகள் ஏற்படும். கட்டிகளே ஏற்பட்டாலும் அது பெரிதாகி அறுவை சிகிச்சை செய்து அகற்றும் நிலைக்கு செல்லாமல் ஆரம்ப நிலையிலேயே தகுந்த மருத்துவம் செய்து கொள்வது நல்லதாகும். ஹோமியோபதி மருத்துவம் இதற்கு நல்ல பலன் அளிக்கக் கூடியது. அறுவை சிகிச்சை இல்லாமல் ஆரம்ப கட்டமாக இருந்தாலும் , அது நாள்பட்டதாக இருந்தாலும், அதை முற்றிலுமாகக் கரைத்து குணம் அளிக்கக் கூடிய மருந்துகள் எங்களின்   ஜேர்மன் ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் உள்ளது. இதில் சிகிச்சை பெற்று நூற்றுக் கணக்கானோர் முழுமையான குணம் அடைந்துள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ் !!! எல்லா புகழும் !இறைவனுக்கே!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
அல்லாஹ் நம் அனைவரையும் நோயிலிருந்து காப்பாற்றுவானாக!!
நன்றி.. ஷர்புத்தீன்
நன்றி.. நர்கிஸ்
இது உங்கள் சத்திய பாதை இஸ்லாம் *********************************  

Comments