கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Saturday, 9 May 2015

கர்ப்பிணியின் சத்துணவு


கர்ப்பிணியின் சத்துணவு
மனித சமுதாயம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த காலம் வரை நோயை எதிர்க்கும் ஆற்றலைப் பெற்றிருந்தது. ஆனால் இயற்கையோடு எதிரான செயல்களை இன்பமாய் எண்ணி வாழும் இன்றைய மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். அதோடு நம்மில் சிலர் எதையெல்லாம் சரியென்று பிடித்துக் கொள்கிறார்களோ அவற்றில் உள்ள தவறான எண்ணங்களை மாற்றிக்கொள்வது மிகவும் அவசியமாகும்.


பெண்கள் கருவுற்றிருக்கும் காலம் தாய்ப்பால் கொடுக்கும் மாதங்களும் சத்துணவில் அக்கறை செலுத்தும் முக்கியமான பருவங்களாகும். இந்தக் காலத்தில் எதை உண்ணவேண்டும். எதை உண்ணக் கூடாது என்பதில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். கருவுற்றிருக்கும் காலத்தில் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று ஓரு அச்சம் நிலவுகிறது. ஆனால் இந்தக் காலத்தில் பெண்களுக்கு வைட்டமின் ஏ சத்து நிறையத் தேவை என்பதாலேயே உண்ணச் சொல்லியிருக்கிறார்கள். பப்பாளியின் விதைகளுக்கு கருச்சிதைவு செய்யும் தன்மை உள்ளது என்பதற்காக முழுப்பழத்தையும் ஒதுக்கி விடுதல் கூடாது.

முட்டையும் ஆட்டிறைச்சியும் கூடாது. மீன் உண்பது தவறு என்றும் பல பகுதிகளில் வாழும் மக்கள் கருதுகிறார்கள். இதற்கான ஆதாரம் இல்லை. பிரசவத்தின் போதும், பிரசவம் ஆன பிறகும் நீர் அருந்துவது ஆபத்து என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால், கொதிக்க வைத்த நீரை தாராளமாகக் கொடுக்கலாம்.

பொதுவாக குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயது வரை இன்னென்ன உணவுகளை முறையாக கொடுக்க வேண்டும் என்று உள்ளது. அதனை மருத்துவரின் ஆலோசனையின்படி குழந்தைகளுக்கு வழங்குதல் வேண்டும். நன்றாக வெந்தப்பருப்பை குழந்தைகள் நிறைய சாப்பிடலாம். குறிப்பாக பயிற்றம் பருப்பு இளம் குழந்தைகளுக்கு நன்கு செரிமானமாகும். முளைவிட்ட பருப்பு விதைகளை முழுதாகச் சமைத்தாலும் அல்லது வெயிலில் காயவைத்துப் பொடியாக்கி உணவாக்கினாலும் குழந்தைகளின் ஆரோக்கிய உணவுக்கு அவை நல்லது.

வாழைப்பழமா... அது மந்தம் குழந்தைக்கு ஆகாது. இழுப்பு வந்து விடும் என்பார்கள். பழுத்தப்பழம் எதைத்தின்றாலும் ஒத்துக்கொள்ளாது. அதற்காகவும் பழமே சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்யக்கூடாது.

எருமைப் பாலை குழந்தைகளுக்குக் கொடுத்தால் மூளை மந்தமாகிவிடும் என்கிறார்கள். எருமையின் இயல்பை வைத்தே அவ்வாறு சொல்கிறார்கள் என்பதைத் தவிர வேறில்லை. குழந்தை பிறந்த இரண்டு மூன்று நாட்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்காமல், நீர் போல சுரக்கும் இதற்கு கொலோஸ்ட்ரம் என்று பெயர். சிலர் இத்திரவத்தை குழந்தைகளுக்கு ஊட்டக்கூடாது என்று தடுப்பார்கள். சர்க்கரைத் தண்ணீரை கொடுக்கச் சொல்வார்கள். ஆனால், கொலோஸ்ட்ரம் என்னும் திரவம் அரிய சத்துகளைக் கொண்டது. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு வேண்டிய நோய்தடுப்பு மருந்துப் பொருள்கள் அதில் அடங்கியுள்ளன. மேலும். குழந்தை இத்திரவத்தை உறிஞ்சும் போதிலும் தாய்க்கு இயல்பான சுரப்பு உண்டாகும்.

குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், சிலர் அதனை பட்டினி போட்டு விடுகிறார்கள். இது தவறாகும். அப்போது சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கலாம். தாய்ப்பால் கொடுப்பதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது.

மழையில் நனையாதே, பனியில் நடக்காதே அதைத் தின்னாதே.. இதைத்தின்னாதே என்று தடுத்துக் கொண்டே இருக்காதீர்கள். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் குழந்தைப் பருவத்தில் நீங்கள் தின்னக்கூடாது என்று தடுத்த பொருளை தின்னுகின்ற போது நிச்சயமாக அவர்கள் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே இது போன்ற தவறான கருத்துக்களை சற்று தள்ளி வைத்துவிட்டு இயல்பாய் அணுகுவது நல்லது என்கிறார்.


No comments:

Post a Comment